ءَامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَأَنفِقُوا۟ مِمَّا جَعَلَكُم مُّسْتَخْلَفِينَ فِيهِ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ وَأَنفَقُوا۟ لَهُمْ أَجْرٌ كَبِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! அவன் எதில் உங்களை (ஒருவருக்குப் பின்னர் ஒருவரை) பிரதிநிதிகளாக ஆக்கினானோ அதில் (-அந்த செல்வத்தில்) இருந்து தர்மம் செய்யுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டு, தர்மம் செய்தவர்கள் - அவர்களுக்கு மிகப் பெரிய கூலி உண்டு.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும், அவன் எதில் உங்களை (ஒருவருக்குப் பின்னர் ஒருவரை) பிரதிநிதிகளாக ஆக்கினானோ அ(-ந்த செல்வத்)திலிருந்து தர்மம் செய்யுங்கள்! ஆக, (மனிதர்களே!) உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ; இன்னும், தர்மம் செய்தார்களோ அவர்களுக்கு மிகப் பெரிய வெகுமதி(யாகிய சொர்க்கம்) உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi7. ஆகவே, (மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள்களிலிருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு தானம் செய்கிறார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு.