أَلَمْ يَأْنِ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ ٱللَّهِ وَمَا نَزَلَ مِنَ ٱلْحَقِّ وَلَا يَكُونُوا۟ كَٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ مِن قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ ٱلْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِّنْهُمْ فَٰسِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை நினைவு கூர்வதாலும் இறங்கிய சத்தியவேதத்(தை ஓதுவ)தினாலும் அவர்களின் உள்ளங்கள் நடுங்குவதற்கு நம்பிக்கையாளர்களுக்கு நேரம் வரவில்லையா? இதற்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் அவர்கள் ஆகிவிட வேண்டாம். அவர்கள் மீது (-முந்திய வேதக் காரர்கள் மீது) காலம் மிக நீண்டுவிட்டது. ஆகவே, அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்களில் அதிகமானவர்கள் பாவிகள் ஆவார்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வை நினைவு கூர்வதாலும் இறங்கிய உண்மையான வேதத்(தை ஓதுவ)தினாலும் அவர்களின் உள்ளங்கள் நடுங்க நம்பிக்கையாளர்களுக்கு நேரம் வரவில்லையா? இன்னும், இதற்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் அவர்கள் ஆகிவிட வேண்டாம். ஆக, அவர்கள் (-முந்திய வேதக்காரர்கள்) மீது காலம் மிக நீண்டுவிட்டது. ஆகவே, அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை மீறக்கூடிய) பாவிகள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும், அவன் இறக்கிவைத்த சத்திய (வசன)ங்களைக் கவனித்தும் பயப்படக்கூடிய நேரம் (இன்னும்) வரவில்லையா? இவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல், இவர்களும் ஆகிவிட வேண்டாம். (இவ்வாறே) அவர்கள் மீதும் ஒரு நீண்ட காலம் கடந்து விட்டது. ஆகவே, அவர்களுடைய உள்ளங்கள் கடினமாக இருகிவிட்டன. இன்னும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாகி விட்டனர்.