وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ عَذَابًا دُونَ ذَٰلِكَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு அதற்கு முன்னரே (-மறுமையின் வேதனை வருவதற்கு முன்னரே உலகத்திலும்) வேதனை (-தண்டனை) உண்டு. என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (தங்களுக்கு வேதனை வரும் என்பதை) அறியமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக, அநியாயம் செய்தவர்களுக்கு அ(ந்த மறுமையின் தண்டனை வருவ)தற்கு முன்னரே (உலகத்திலும்) தண்டனை உண்டு. என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (அவர்களுக்கு தண்டனை வரும் என்பதை) அறியமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi47. நிச்சயமாக இவ்வக்கிரமக்காரர்களுக்கு (மறுமையின்) வேதனைக்கு முன்னால் (இம்மையிலும்) வேதனை இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.