وَجَآءَتْ سَكْرَةُ ٱلْمَوْتِ بِٱلْحَقِّ ذَٰلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيدُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமரணத்தின் மயக்கம் உண்மையாக வந்துவிட்டது. அது (-அந்த மரணம்) தான் (இது நாள் வரை) நீ அதை விட்டு விலகி ஓடுபவனாக இருந்தாய்.
Tamil Translation - Omar Sharifமரணத்தின் மயக்கம் (மறுமையின்) உண்மையை கொண்டு வந்துவிட்டது. அதுதான் (-அந்த மரணம் இது நாள் வரை) நீ அதை விட்டு விலகி ஓடுகிறவனாக இருந்தாய்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில் (அவனை நோக்கி) ‘‘நீ தப்பிவிடக் கருதியது இதுதான்'' (என்று கூறப்படும்.)