إِنَّمَا يُرِيدُ ٱلشَّيْطَٰنُ أَن يُوقِعَ بَيْنَكُمُ ٱلْعَدَٰوَةَ وَٱلْبَغْضَآءَ فِى ٱلْخَمْرِ وَٱلْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ ٱللَّهِ وَعَنِ ٱلصَّلَوٰةِ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக ஷைத்தான் நாடுவதெல்லாம் மதுவினாலும் சூதாட்டத்தினாலும் உங்களுக்கு மத்தியில் பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணுவதையும், அல்லாஹ்வின் ஞாபகத் திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுப்பதையும்தான். ஆகவே, நீங்கள் (அவற்றிலிருந்து) விலகுபவர்களா?
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக ஷைத்தான் நாடுவதெல்லாம் மதுவினாலும் சூதாட்டத்தினாலும் உங்களுக்கு மத்தியில் பகைமை; இன்னும், வெறுப்பை தூண்டிவிடுவதையும், அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுப்பதையும்தான். ஆகவே, நீங்கள் (அவற்றிலிருந்து) விலகிவிடுவீர்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi91. மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவற்றிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?)