وَلَوْ كَانُوا۟ يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلنَّبِىِّ وَمَآ أُنزِلَ إِلَيْهِ مَا ٱتَّخَذُوهُمْ أَوْلِيَآءَ وَلَٰكِنَّ كَثِيرًا مِّنْهُمْ فَٰسِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வையும், நபியையும் அவருக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்களாக அவர்கள் இருந்திருந்தால் அ(ந்நிராகரிப்ப)வர்களை நண்பர்களாக (பொறுப்பாளர்களாக) எடுத்திருக்கமாட்டார்கள். என்றாலும், அவர்களில் அதிகமானோர் பாவிகள் ஆவர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் அல்லாஹ்வையும், நபியையும் அவருக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்களாக அவர்கள் இருந்திருந்தால் அ(ந்நிராகரிப்ப)வர்களை நண்பர்களாக (தங்களது பொறுப்பாளர்களாக) எடுத்திருக்கமாட்டார்கள். என்றாலும், அவர்களில் அதிகமானோர் பாவிகள் ஆவர்.
Tamil Translation - Abdulhamid Baqawi81. அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் (நிராகரித்த) அவர்களைத் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையினர் பாவிகள் ஆவர்.