مَّا ٱلْمَسِيحُ ٱبْنُ مَرْيَمَ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ ٱلرُّسُلُ وَأُمُّهُۥ صِدِّيقَةٌ كَانَا يَأْكُلَانِ ٱلطَّعَامَ ٱنظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ ٱلْـَٔايَٰتِ ثُمَّ ٱنظُرْ أَنَّىٰ يُؤْفَكُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே தவிர வேறில்லை. இவருக்கு முன்னர் தூதர்கள் சென்றுவிட்டனர். அவருடைய தாய் ஒரு மகா உண்மையாளர். இருவரும் உணவு சாப்பிட்டு வந்தனர். நாம் அத்தாட்சிகளை அவர்களுக்கு எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்று (நபியே!) கவனிப்பீராக. பிறகு, அவர்கள் எவ்வாறு (சத்தியத்தை விட்டு) திருப்பப்படுகின்றனர் என்று(ம்) கவனிப்பீராக.
Tamil Translation - Omar Sharifமர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே தவிர (அவர் இறைவனோ, இறைவனின் மகனோ) இல்லை. இவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவருடைய தாய் ஒரு மகா உண்மையாளர். அவர்கள் இருவரும் உணவு சாப்பிட்டு வந்தனர். நாம் அத்தாட்சிகளை அவர்களுக்கு எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்று (நபியே!) நீர் கவனிப்பீராக. பிறகு, அவர்கள் எவ்வாறு (சத்தியத்தை விட்டு) திருப்பப்படுகிறார்கள் என்று(ம்) கவனிப்பீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi75. மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே! தவிர (இறைவனோ இறைவனுடைய மகனோ) அல்ல. இவருக்கு முன்னரும் (இவரைப் போல்) பல தூதர்கள் (வந்து) சென்றுவிட்டனர். அவருடைய தாயும் (கடவுள் அல்ல. அவர்) மிக்க உண்மையான ஒரு சத்தியவாதியாகத்தான் இருந்தார். இவ்விருவரும் (இவ்வுலகிலிருந்த காலமெல்லாம் மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டு (வாழ்ந்து) வந்தனர். (ஆகவே, இவ்விருவரும் எவ்வாறு இறைவனாக ஆவார்கள்? இதை) நாம் பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு எவ்வாறு தெளிவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (உண்மையில் இருந்து) அவர்கள் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுவிட்டனர் என்பதையும் நீர் கவனிப்பீராக.