caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 68

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:68

قُلْ يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ لَسْتُمْ عَلَىٰ شَىْءٍ حَتَّىٰ تُقِيمُوا۟ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُم مَّآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَٰنًا وَكُفْرًا فَلَا تَأْسَ عَلَى ٱلْقَوْمِ ٱلْكَٰفِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக, "வேதக்காரர்களே! தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும் நீங்கள் நிலைநிறுத்தும் வரை நீங்கள் ஒரு விஷயத்திலும் இல்லை.” உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானவர்களுக்கு வரம்பு மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே, நிராகரிப்பாளர்களான சமுதாயத்தைப் பற்றி (நீர்) கவலைப்படாதீர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக, “வேதக்காரர்களே! தவ்ராத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும் நீங்கள் நிலைநிறுத்தும் வரை நீங்கள் ஒரு விஷயத்திலும் இல்லை.’’ உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானவர்களுக்கு எல்லை மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே, நிராகரிப்பாளர்களான மக்களைப் பற்றி (நீர்) கவலைப்படாதீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi68. (நபியே! அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) நீங்கள் கடைப்பிடிக்காதவரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்ல'' என்று நீர் கூறுவீராக. உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டவை அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி வரும். ஆகவே, இந்நிராகரிப்பவர்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70