قَالُوا۟ يَٰمُوسَىٰٓ إِنَّ فِيهَا قَوْمًا جَبَّارِينَ وَإِنَّا لَن نَّدْخُلَهَا حَتَّىٰ يَخْرُجُوا۟ مِنْهَا فَإِن يَخْرُجُوا۟ مِنْهَا فَإِنَّا دَٰخِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான ஒரு சமுதாயம் இருக்கிறது. அவர்கள், அதிலிருந்து வெளியேறும் வரை நிச்சயமாக நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதிலிருந்து வெளியேறினால் நிச்சயமாக நாங்கள் (அதில்) நுழைவோம்” என்றனர்.
Tamil Translation - Omar Sharif(அவர்கள் மூஸாவை நோக்கி) “மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான சமுதாயம் இருக்கிறது. அவர்கள், அதிலிருந்து வெளியேறும் வரை நிச்சயமாக நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். ஆக, அவர்கள் அதிலிருந்து வெளியேறினால் நிச்சயமாக நாங்கள் (அதில்) நுழைவோம்” என்று கூறினர்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. (அதற்கு) அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான மக்கள் இருக்கின்றனர். அவர்கள், அதைவிட்டு வெளியேறும் வரை நாங்கள் அதனுள் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறி விட்டால் நாங்கள் தவறாமல் நுழைந்துவிடுவோம்'' என்றனர்.