caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Fath அத்தியாயம், வசனம் 24

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 111 · 48:24

وَهُوَ ٱلَّذِى كَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُم بِبَطْنِ مَكَّةَ مِنۢ بَعْدِ أَنْ أَظْفَرَكُمْ عَلَيْهِمْ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் அவர்களின் கரங்களை உங்களை விட்டும் உங்கள் கரங்களை அவர்களை விட்டும் மக்காவின் நடுப்பகுதியில் வைத்து தடுத்தான், அவர்கள் மீது உங்களுக்கு வெற்றி கொடுத்த பின்னர். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் அவர்களின் கரங்களை உங்களை விட்டும் தடுத்தான். இன்னும், அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியை கொடுத்த பின்னர் உங்கள் கரங்களை அவர்களை விட்டும் மக்காவின் நடுப்பகுதியில் வைத்து தடுத்தான். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi24. மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்துக் கொண்டான். (அவ்வாறே) உங்கள் கைகளையும் அவர்களை விட்டுத் தடுத்துக் கொண்டான். ஏனென்றால், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கியவனாகவே இருந்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70