caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Muhammad அத்தியாயம், வசனம் 30

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 95 · 47:30

وَلَوْ نَشَآءُ لَأَرَيْنَٰكَهُمْ فَلَعَرَفْتَهُم بِسِيمَٰهُمْ وَلَتَعْرِفَنَّهُمْ فِى لَحْنِ ٱلْقَوْلِ وَٱللَّهُ يَعْلَمُ أَعْمَٰلَكُمْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் நாடினால் அவர்களை உமக்கு காண்பித்து விடுவோம். அவர்களை அவர்களின் வெளிப்படையான அடையாளங்களினால் நீர் அறிந்து கொள்வீர். இன்னும், அவர்களின் பேச்சின் தொனியிலும் அவர்களை நிச்சயமாக நீர் அறிவீர். அல்லாஹ் உங்கள் (அனைவரின்) செயல்களை நன்கறிவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நாம் நாடினால் அவர்களை உமக்கு காண்பித்து விடுவோம். ஆக, அவர்களை அவர்களின் வெளிப்படையான அடையாளங்களினால் நீர் அறிந்து கொள்வீர். இன்னும், அவர்களின் பேச்சின் தொனியிலும் அவர்களை நிச்சயமாக நீர் அறிந்துவிடுவீர். அல்லாஹ் உங்கள் (அனைவரின்) செயல்களை நன்கறிவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. (நபியே!) நாம் விரும்பினால், அவர்களை உமக்கு காட்டிக் கொடுத்து விடுவோம். (அப்போது) அவர்களுடைய முகக்குறியைக் கொண்டே நீரும் அவர்களை அறிந்து கொள்வீர். அவர்களுடைய தந்திரமான பேச்சின் போக்கைக் கொண்டும் நீர் அவர்களை நிச்சயமாக அறிந்து கொள்வீர். (நயவஞ்சகர்களே!) அல்லாஹ் உங்கள் செயல்களை நன்கறிவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70