وَمِنْهُم مَّن يَسْتَمِعُ إِلَيْكَ حَتَّىٰٓ إِذَا خَرَجُوا۟ مِنْ عِندِكَ قَالُوا۟ لِلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ مَاذَا قَالَ ءَانِفًا أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் (-அந்த நயவஞ்சகர்களில்) உம் பக்கம் (அலட்சியமாக) செவி சாய்க்கின்றவர்களும் உள்ளனர். இறுதியில் அவர்கள் உம்மிடமிருந்து வெளியே புறப்பட்டால் (தாங்களும் கவனமாகக் கேட்டது போன்று காண்பிப்பதற்காகவும் பரிகாசமாகவும்) கல்வி கொடுக்கப்பட்டவர்களிடம் கூறுகின்றனர்: “இவர் (-இந்த தூதர்) சற்று நேரத்திற்கு முன்பு என்ன கூறினார் (தெரியுமா? எவ்வளவு அழகான கருத்தை கூறினார் தெரியுமா?)” இவர்கள்தான், அல்லாஹ் இவர்களின் உள்ளங்களில் முத்திரையிட்டு விட்டான். இவர்கள் தங்கள் மன இச்சைகளை பின்பற்றினார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்களில் (-அந்த நயவஞ்சகர்களில் அலட்சியமாக) உம் பக்கம் செவி சாய்ப்பவர்களும் உள்ளனர். இறுதியில் அவர்கள் உம்மிடமிருந்து வெளியே புறப்பட்டால் (தாங்களும் கவனமாகக் கேட்டது போன்று காண்பிப்பதற்காகவும் கேலியாகவும்) கல்வி கொடுக்கப்பட்டவர்களிடம் கூறுகிறார்கள்: “இவர் (-இந்த தூதர்) சற்று நேரத்திற்கு முன்பு என்ன கூறினார் (தெரியுமா? எவ்வளவு அழகான கருத்தைக் கூறினார் தெரியுமா?)” இவர்கள் எத்தகையோர் என்றால், அல்லாஹ் இவர்களின் உள்ளங்களில் முத்திரையிட்டு விட்டான். இன்னும், இவர்கள் தங்கள் கெட்ட ஆசைகளைப் பின்பற்றினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. (நபியே! நீர் இவ்வேதத்தை ஓதிய சமயத்தில்) உமக்குச் செவிசாய்ப்பவர்களைப் போல் இருந்து பிறகு, உம்மை விட்டு வெளிப்பட்டதும், (நம்பிக்கையாளர்களாகிய, இவ்வேத) ஞானம் கொடுக்கப்பட்டவர்களை நோக்கி(ப் பரிகாசமாக ‘‘உங்கள் நபி) சற்று முன் என்ன கூறினார்?'' எனக் கேட்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். இத்தகையவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். (ஆதலால்,) இவர்கள் தங்கள் சரீர இச்சையைத்தான் பின்பற்றி நடக்கின்றனர்.