أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّهِۦ كَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُم
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதமது இறைவனின் தெளிவான அத்தாட்சியில் இருப்பவர்கள், எவர்களுக்கு தங்களது கெட்ட செயல்கள் தமக்கு அலங்கரிக்கப்பட்டு தங்களது மன இச்சைகளை பின்பற்றுகின்றார்களோ அவர்களைப் போன்று ஆவார்களா?
Tamil Translation - Omar Sharifஆக, தமது இறைவனின் தெளிவான அத்தாட்சியில் இருப்பவர்கள், எவர்களுக்கு அவர்களது கெட்ட செயல்கள் அலங்கரிக்கப்பட்டு; இன்னும், அவர்களுடைய மன இச்சைகளை பின்பற்றினார்களோ அவர்களைப் போன்று ஆவார்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi14. தங்கள் இறைவனின் தெளிவான (நேரிய) பாதையின் மீது இருப்பவர்கள், தங்கள் தீய காரியங்களையே அழகாகக் கண்டு, தங்கள் சரீர இச்சைகளையே பின்பற்றுகிறவர்களுக்கு ஒப்பாகுவார்களா?