وَيَوْمَ يُعْرَضُ ٱلَّذِينَ كَفَرُوا۟ عَلَى ٱلنَّارِ أَلَيْسَ هَٰذَا بِٱلْحَقِّ قَالُوا۟ بَلَىٰ وَرَبِّنَا قَالَ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்நாளில், நிராகரித்தவர்கள் நரகத்தின் முன் கொண்டுவரப்படும் (அவர்களுக்கு கூறப்படும்): “இது உண்மையாக இல்லையா?” அவர்கள் கூறுவார்கள்: “ஏன் இல்லை?” எங்கள் இறைவன் மீது சத்தியமாக (இது உண்மைதான்) (அல்லாஹ்) கூறுவான்: “நீங்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால் இந்த வேதனையை நீங்கள் சுவையுங்கள்!”
Tamil Translation - Omar Sharifஅந்நாளில், நிராகரித்தவர்கள் நரகத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள். (இன்னும் அவர்களுக்குக் கூறப்படும்:) “இது உண்மையாக இல்லையா?” அவர்கள் கூறுவார்கள்: “ஏன் இல்லை? எங்கள் இறைவன் மீது சத்தியமாக (இது உண்மைதான்.)” (அல்லாஹ்) கூறுவான்: “ஆக, நீங்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால் இந்த தண்டனையை சுவையுங்கள்!”
Tamil Translation - Abdulhamid Baqawi34. நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி,) ‘‘இது உண்மையல்லவா? (என்று கேட்கப்படும்.) அதற்கு அவர்கள் ஏனில்லை! ‘‘எங்கள் இறைவன் மீது சத்தியமாக! உண்மைதான்'' என்று கூறுவார்கள். (அதற்கவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இதை நிராகரித்ததன் காரணமாக இதன் வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்'' என்று கூறுவான்.