caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahqaf அத்தியாயம், வசனம் 33

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 66 · 46:33

أَوَلَمْ يَرَوْا۟ أَنَّ ٱللَّهَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَلَمْ يَعْىَ بِخَلْقِهِنَّ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ بَلَىٰٓ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்தவனும், அவற்றைப் படைத்ததால் களைத்துவிடாதவனுமாகிய அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? ஏன் இல்லை. நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்தவனாகிய, இன்னும் அவற்றைப் படைத்ததால் கலைப்படையாதவனுமாகிய அல்லாஹ் இறந்தவர்களை உயிர்பிப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? ஏன் இல்லை. (அவன் கண்டிப்பாக உயிர்ப்பிப்பான்,) நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi33. வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றல் உடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? ஆம், நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70