caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahqaf அத்தியாயம், வசனம் 32

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 66 · 46:32

وَمَن لَّا يُجِبْ دَاعِىَ ٱللَّهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِى ٱلْأَرْضِ وَلَيْسَ لَهُۥ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءُ أُو۟لَٰٓئِكَ فِى ضَلَٰلٍ مُّبِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதில் தரவில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வின் பிடியை விட்டு எங்கும்) தப்பித்துவிட மாட்டார். அவனை அன்றி அவருக்கு பாதுகாவலர்கள் இல்லை. இப்படிப்பட்டவர்கள் மிகத் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifஎவர் அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதில் தரவில்லையோ (அவரது மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லையோ) அவர் பூமியில் (அல்லாஹ்வின் பிடியை விட்டு எங்கும்) தப்பித்துவிட மாட்டார். இன்னும், அவனை அன்றி அவருக்கு பாதுகாவலர்கள் இல்லை. இப்படிப்பட்டவர்கள் மிகத் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடியபோதிலும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. பாதுகாப்பவர் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இவர்கள் பகிரங்கமான வழி கேட்டில்தான் இருப்பர்'' என்றார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70