وَلِكُلٍّ دَرَجَٰتٌ مِّمَّا عَمِلُوا۟ وَلِيُوَفِّيَهُمْ أَعْمَٰلَهُمْ وَهُمْ لَا يُظْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய இவர்கள்) எல்லோருக்கும் அவர்கள் செய்தவற்றின் (-அவர்களுடைய செயல்களின்) அடிப்படையில் தகுதிகள் உண்டு. இன்னும், இறுதியாக அவன் அவர்களுடைய செயல்களுக்கு அவர்களுக்கு முழு கூலி கொடுப்பான். இன்னும் அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய இவர்கள்) எல்லோருக்கும் (மறுமையில்) அவர்கள் செய்தவற்றின் (-அவர்களுடைய செயல்களின்) அடிப்படையில் தகுதிகள் உண்டு. இன்னும், இறுதியாக அவன் அவர்களுடைய செயல்களுக்காக அவர்களுக்கு முழுமையான கூலி கொடுப்பான். இன்னும், அவர்கள் (நன்மைகள் குறைக்கப்பட்டோ குற்றங்கள் அதிகப்படுத்தப்பட்டோ) அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. இவர்களில் ஒவ்வொருவருக்கும் (நன்மையோ தீமையோ) அவர்கள் செயலுக்குத் தக்க பதவிகள் இருக்கின்றன. ஆகவே, அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியை முழுமையாகவே கொடுக்கப்படுவார்கள். (நன்மையைக் குறைத்தோ, பாவத்தை அதிகரித்தோ) இவர்களில் ஒருவருக்கும் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டாது.