أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ حَقَّ عَلَيْهِمُ ٱلْقَوْلُ فِىٓ أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنَّهُمْ كَانُوا۟ خَٰسِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின், மற்றும் மனித சமுதாயங்களுடன் இவர்கள் மீதும் (அல்லாஹ்வுடைய தண்டனையின்) வாக்கு உறுதியாகிவிட்டது. “நிச்சயமாக இவர்கள் (-நிராகரிப்பாளர்களான முன்னோரும் பின்னோரும்) நஷ்டவாளிகளாகவே இருக்கின்றனர்.”
Tamil Translation - Omar Sharifஇவர்கள் எத்தகையோர் என்றால் இவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின், மற்றும் மனித சமுதாயங்களுடன் இவர்கள் மீதும் (அல்லாஹ்வுடைய தண்டனையின்) வாக்கு உறுதியாகிவிட்டது. “நிச்சயமாக இவர்கள் (நிராகரிப்பாளர்களான முன்னோர், பின்னோர் எல்லோரும்) நஷ்டவாளிகளாகவே இருக்கிறார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi18. இத்தகையவர்களின் கதியோ, இவர்களுக்கு முன் சென்றுபோன (பாவிகளான) மனித, ஜின்களிலுள்ள கூட்டத்தார்களைப்போல் (இவர்களும் அழிந்து) இவர்களின் மீதும் (அல்லாஹ்வுடைய வேதனை வந்திறங்கியே தீருமென்ற) வாக்குறுதி உண்மையாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்.