يَسْمَعُ ءَايَٰتِ ٱللَّهِ تُتْلَىٰ عَلَيْهِ ثُمَّ يُصِرُّ مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் அல்லாஹ்வின் வசனங்கள் தன் மீது ஓதப்படுவதை செவியுறுகின்றான். பிறகு, பெருமை பிடித்தவனாக (நிராகரிப்பிலேயே) பிடிவாதம் காட்டுகின்றான் அவனோ அவற்றை செவியுறாதவனைப் போல. அவனுக்கு வலி தரக்கூடிய வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுங்கள்!
Tamil Translation - Omar Sharifஅவன், தனக்கு முன் அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்படுவதை செவியுறுகிறான். பிறகு, பெருமை பிடித்தவனாக அவனோ அவற்றை செவியுறாதவனைப் போல (நிராகரிப்பிலேயே) பிடிவாதம் பிடிக்கிறான். ஆக, துன்புறுத்தும் தண்டனையைக் கொண்டு அவனுக்கு நற்செய்தி கூறுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi8. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டதை செவிமடுத்து விட்டு பின்னர், அதை செவிமடுக்காதவர்களைப்போல் கர்வம் கொண்டு (நிராகரிப்பின் மீதே) பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக.