وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ وَٱلسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِى مَا ٱلسَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது, மறுமை அதில் அறவே சந்தேகமில்லை என்று (உங்களிடம்) கூறப்பட்டால் நீங்கள் கூறுவீர்கள்: “மறுமை என்றால் என்ன? என்று நாங்கள் அறியமாட்டோம். (மறுமை வரும் என்று) நாங்கள் ஒரு (சாதாரணமான) எண்ணமாகவே தவிர எண்ணவில்லை. (அது வரும் என்று) உறுதிசெய்பவர்களாக நாங்கள் இல்லை.
Tamil Translation - Omar Sharif“நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது, மறுமை அதில் அறவே சந்தேகமில்லை” என்று (உங்களிடம்) கூறப்பட்டால் நீங்கள் கூறினீர்கள்: “மறுமை என்றால் என்ன? என்று நாங்கள் அறியமாட்டோம். (மறுமை வரலாம் என்று) நாங்கள் ஒரு சாதாரணமான எண்ணமாகவே தவிர எண்ணவில்லை. (அது வரும் என்று) உறுதிகொண்டவர்களாக நாங்கள் இல்லை.”
Tamil Translation - Abdulhamid Baqawi32. மேலும், ‘‘ நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது, மறுமை வருவதில் அறவே சந்தேகமில்லை'' என்று (உங்களுக்குக்) கூறப்பட்டால் அதற்கு, ‘‘மறுமை இன்னதென்றே நாங்கள் அறியோம். அது (வீணான) வெறும் எண்ணத்தைத் தவிர வேறில்லை என்றே எண்ணுகிறோம். அதை (மெய்யென்று) நாங்கள் நம்பவுமில்லை'' என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?) என்று (அவர்களிடம்) கேட்கப்படும்.