وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَفَلَمْ تَكُنْ ءَايَٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ فَٱسْتَكْبَرْتُمْ وَكُنتُمْ قَوْمًا مُّجْرِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, நிராகரித்தவர்கள் (அவர்களை நோக்கி கூறப்படும்:) “எனது வசனங்கள் உங்கள் மீது ஓதப்பட்டுக் கொண்டிருக்கவில்லையா? நீங்கள் பெருமை அடித்தீர்கள். நீங்கள் குற்றம் புரிகின்ற மக்களாக இருந்தீர்கள்.”
Tamil Translation - Omar Sharifஆக, நிராகரித்தவர்கள் (அவர்களை நோக்கி கூறப்படும்:) “எனது வசனங்கள் உங்களுக்கு முன்னால் ஓதப்படவில்லையா? ஆக, நீங்கள் (அவற்றை ஏற்காமல்) பெருமை அடித்தீர்கள். இன்னும், நீங்கள் குற்றம் புரிகின்ற மக்களாக இருந்தீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi31. எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் நீங்கள் பெருமைகொண்டு (அதைப் புறக்கணித்து) விட்டீர்கள். இன்னும் நீங்கள் குற்றவாளிகளாக இருந்தீர்கள்'' (என்றும் கூறப்படும்).