caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Jaathiya அத்தியாயம், வசனம் 17

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 65 · 45:17

وَءَاتَيْنَٰهُم بَيِّنَٰتٍ مِّنَ ٱلْأَمْرِ فَمَا ٱخْتَلَفُوٓا۟ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْ إِنَّ رَبَّكَ يَقْضِى بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇந்த மார்க்கத்தின் தெளிவான சட்டங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். அவர்களிடம் கல்வி வந்த பின்னர் தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமையினால் தவிர அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபடவில்லை. நிச்சயமாக உமது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில் தீர்ப்பளிப்பான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இந்த மார்க்கத்தின் தெளிவான சட்டங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். ஆக, அவர்களிடம் கல்வி வந்த பின்னர், தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமையினால் அவர்கள் (தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) கருத்து வேறுபாடு கொண்டார்கள். நிச்சயமாக உமது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவற்றில் தீர்ப்பளிப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. மேலும், நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) பிரிந்து விட்டனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் தர்க்கித்துக் கொண்டவற்றைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70