caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Jaathiya அத்தியாயம், வசனம் 14

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 65 · 45:14

قُل لِّلَّذِينَ ءَامَنُوا۟ يَغْفِرُوا۟ لِلَّذِينَ لَا يَرْجُونَ أَيَّامَ ٱللَّهِ لِيَجْزِىَ قَوْمًۢا بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு கூறுவீராக! (பாவிகளை அல்லாஹ் எப்படி தண்டிப்பான் என்று) அல்லாஹ்வின் நடவடிக்கைகளை ஆதரவு வைக்காதவர்களை அவர்கள் மன்னித்து விடட்டும். இறுதியாக ஒரு கூட்டத்திற்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு (அவர்களின் தீமைகளுக்கு) தண்டனை கொடுப்பான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நம்பிக்கையாளர்களுக்குக் கூறுவீராக! “(பாவிகளை அல்லாஹ் எப்படி தண்டிப்பான் என்று) அல்லாஹ்வின் நடவடிக்கைகளை பயப்படாதவர்களை அவர்கள் மன்னிப்பார்களாக.” இறுதியாக, (அழிச்சாட்டியமும் நம்பிக்கையாளர்களுக்கு தொந்தரவும் செய்து கொண்டிருந்த) ஒரு கூட்டத்தை அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்காக அவன் (தகுந்த தண்டனையால்) தண்டிப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறுவீராக: “அவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைகளை நம்பாத மக்களை மன்னித்து (அவர்கள் விஷயத்தை அல்லாஹ்விடமே விட்டு) விடுவார்களாக. (நன்மையோ, தீமையோ செய்யும்) மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அவன் கொடுப்பான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70