وَتَبَارَكَ ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَعِندَهُۥ عِلْمُ ٱلسَّاعَةِ وَإِلَيْهِ تُرْجَعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி எவனுக்கு உரியதோ அவன் மிக்க பாக்கியமுடையவன். அவனிடமே மறுமையின் அறிவு இருக்கிறது. அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Tamil Translation - Omar Sharifவானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி எவனுக்கு உரியதோ அ(ந்த இறை)வன் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்தானவன் ஆவான். இன்னும், அவனிடமே மறுமையின் அறிவு இருக்கிறது. இன்னும், அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi85. வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி (ரஹ்மானாகிய) அவனுக்குரியதே. அவன் பெரும் பாக்கியம் உடையவன். அவனிடத்தில்தான் மறுமையின் ஞானம் இருக்கிறது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு போகப்படுவீர்கள்.