caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zukhruf அத்தியாயம், வசனம் 86

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 63 · 43:86

وَلَا يَمْلِكُ ٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَن شَهِدَ بِٱلْحَقِّ وَهُمْ يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கின்றார்களோ அவர்கள் (அல்லாஹ்விடம் யாருக்கும்) சிபாரிசு செய்வதற்கு உரிமை பெற மாட்டார்கள். ஆனால், எவர்கள் (அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்ற) உண்மைக்கு அவர்கள் (அதை) நன்கு அறிந்தவர்களாக சாட்சி கூறினார்களோ (-அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு எதையும் இணைவைக்காமல் இருந்தார்களோ) அவர்களுக்குத்தான் (நல்லவர்கள்) சிபாரிசு செய்வார்கள். (தங்களை வணங்கியவர்களுக்கு அல்ல.)
Tamil Translation - Omar Sharifஅவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அல்லாஹ்விடம் யாருக்கும்) சிபாரிசு செய்வதற்கு உரிமை பெற மாட்டார்கள். ஆனால், எவர்கள் (அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்ற) உண்மைக்கு - அவர்கள் (அதை) நன்கு அறிந்தவர்களாக - சாட்சி கூறினார்களோ (-அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு எதையும் இணைவைக்காமல், சிபாரிசை அல்லாஹ்விடம் மட்டும் எதிர்பார்த்து இருந்தார்களோ) அவர்களுக்குத்தான் (வானவர்களும் நல்லவர்களும் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு) சிபாரிசு செய்வார்கள். (அவர்களை வணங்கியவர்களுக்கு அல்ல.)
Tamil Translation - Abdulhamid Baqawi86. அல்லாஹ்வையன்றி எவற்றை இவர்கள் (இறைவனென) அழைக்கிறார்களோ அவை (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்து பேசவும் சக்தி பெறாது. ஆயினும், எவர்கள் உண்மையை அறிந்து அதைப் பகிரங்கமாகவும் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்களுக்கு அவனுடைய அனுமதி கிடைத்தால் அவனிடம் அவர்கள் பரிந்து பேசுவார்கள்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70