caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zukhruf அத்தியாயம், வசனம் 71

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 63 · 43:71

يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِيهِ ٱلْأَنفُسُ وَتَلَذُّ ٱلْأَعْيُنُ وَأَنتُمْ فِيهَا خَٰلِدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்கத்தினாலான தட்டுகளுடனும், குவளைகளுடனும் அவர்களை சுற்றி வரப்படும். அதில் மனங்கள் விரும்புகின்றவையும் கண்கள் இன்புறுகின்றவையும் அவர்களுக்கு உண்டு. நீங்கள் அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்.
Tamil Translation - Omar Sharifதங்கத்தினால் ஆன தட்டுகளுடனும், குவளைகளுடனும் அவர்களை சுற்றி வரப்படும். இன்னும், அதில் (அவர்களது) மனங்கள் விரும்புகின்றவையும் கண்கள் இன்புறுகின்றவையும் அவர்களுக்கு உண்டு. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi71. (பலவகை உணவுகளும் பானங்களும் நிறைந்த) தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டே இருக்கும். அங்கு, அவர்கள் மனம் விரும்பியவையும், அவர்களுடைய கண்களுக்கு ரம்மியமானவையும் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்களை நோக்கி) ‘‘இதில் என்றென்றும் நீங்கள் வசித்திருங்கள்'' (என்றும் கூறப்படும்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70