caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zukhruf அத்தியாயம், வசனம் 49

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 63 · 43:49

وَقَالُوا۟ يَٰٓأَيُّهَ ٱلسَّاحِرُ ٱدْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ إِنَّنَا لَمُهْتَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறினர்: “ஓ சூனியக்காரரே! (-அறிஞரே! உமது இறைவன்) உம்மிடம் வாக்களித்ததை (-கேட்டு அல்லது இந்த வேதனையை நீக்குமாறு) உமது இறைவனிடம் எங்களுக்காக நீர் பிரார்த்திப்பீராக! நிச்சயமாக நாங்கள் நேர்வழி பெறுவோம்.”
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “ஓ மந்திரவாதியே! (-ஓ அறிஞரே! உமது இறைவன்) உம்மிடம் செய்த உடன்படிக்கையை (-கேட்டு; அல்லது, இந்த தண்டனையை நீக்குமாறு) உமது இறைவனிடம் எங்களுக்காக நீர் பிரார்த்திப்பீராக! நிச்சயமாக நாங்கள் நேர்வழி பெறுவோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi49. அச்சமயம் அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘சூனியக்காரரே! (உமது இறைவன் உமது பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வதாக) உமக்களித்த வாக்குறுதியைக் கொண்டு (இவ்வேதனையை நீக்கி) எங்களுக்கு அருள் புரிய உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! (அவ்வாறு நீக்கிவிட்டால்) நிச்சயமாக நாங்கள் (உமது) நேரான வழிக்கு வந்து விடுவோம்'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70