حَتَّىٰٓ إِذَا جَآءَنَا قَالَ يَٰلَيْتَ بَيْنِى وَبَيْنَكَ بُعْدَ ٱلْمَشْرِقَيْنِ فَبِئْسَ ٱلْقَرِينُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇறுதியாக, அவன் (-ரஹ்மானின் நினைவை புறக்கணித்து வாழ்ந்தவன்) நம்மிடம் வரும் போது, (தன்னை வழிகெடுத்த ஷைத்தானை நோக்கி) எனக்கு மத்தியிலும் உனக்கு மத்தியிலும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருக்க வேண்டுமே! என்று கூறுவான். அவன் (-அந்த ஷைத்தான்) மிகக் கெட்ட நண்பன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஇறுதியாக, (-ரஹ்மானின் நினைவை புறக்கணித்து வாழ்ந்த) அவன் நம்மிடம் வரும்போது, (தன்னை வழிகெடுத்த ஷைத்தானை நோக்கி) எனக்கு மத்தியிலும் உனக்கு மத்தியிலும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருக்க வேண்டுமே! என்று கூறுவான். அவன் (-ஷைத்தான்) மிகக் கெட்ட நண்பன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. நம்மிடம் (வரும் வரைதான் அவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பார்கள்.) அவர்கள் (நம்மிடம்) வந்த பின்னரோ (அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘எனக்கும் உமக்கும் இடையில் கீழ் திசைக்கும், மேல் திசைக்கும் உள்ள தொலை தூரம் இருந்திருக்க வேண்டாமா?'' என்றும், ‘‘(எங்களை வழிகெடுத்த எங்கள்) இந்தத் தோழன் மிகப் பொல்லாதவன்'' என்றும் கூறுவார்கள்.