caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zukhruf அத்தியாயம், வசனம் 39

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 63 · 43:39

وَلَن يَنفَعَكُمُ ٱلْيَوْمَ إِذ ظَّلَمْتُمْ أَنَّكُمْ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் (இறைவனுக்கு இணைவைத்து) அநியாயம் செய்த காரணத்தால் நிச்சயமாக நீங்கள் (-வழி கெடுத்தவர்கள், வழிகெட்டவர்கள் எல்லோருமாக) வேதனையில் இணைந்திருப்பது இன்றைய தினம் உங்களுக்கு அறவே பலனளிக்காது. (நரக வேதனை பங்கிட்டுக் கொடுக்கப்படாமல், ஒவ்வொருவருக்கும் முழுமையான வேதனை கொடுக்கப்படும்.)
Tamil Translation - Omar Sharifநீங்கள் (இறைவனுக்கு இணைவைத்து) அநியாயம் செய்த காரணத்தால் நிச்சயமாக (வழிகெடுத்த) நீங்கள் (இன்னும், உங்களை பின்பற்றி வழிகெட்டவர்கள் எல்லோருமாக) தண்டனையில் இணைந்திருப்பது இன்றைய தினம் உங்களுக்கு அறவே பலனளிக்காது. (நரக தண்டனை உங்களுக்கு இடையில் பங்கிட்டுக் கொடுக்கப்படாமல், ஒவ்வொருவருக்கும் முழுமையான தண்டனை கொடுக்கப்படும்.)
Tamil Translation - Abdulhamid Baqawi39. (அதற்கு அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் வரம்பு மீறி பாவம் செய்ததன் காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு (எதுவுமே) பயனளிக்காது. நிச்சயமாக நீங்கள் வேதனையை அனுபவிப்பதில் (அந்த ஷைத்தான்களுக்குக்) கூட்டானவர்கள்தான்'' (என்றும் கூறப்படும்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70