caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zukhruf அத்தியாயம், வசனம் 32

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 63 · 43:32

أَهُمْ يَقْسِمُونَ رَحْمَتَ رَبِّكَ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُم مَّعِيشَتَهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَٰتٍ لِّيَتَّخِذَ بَعْضُهُم بَعْضًا سُخْرِيًّا وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் உமது இறைவனின் அருளை (தமது விருப்பப்படி) பங்கு வைக்கின்றனரா? நாம்தான் அவர்களுக்கு மத்தியில் அவர்களது வாழ்க்கையை இவ்வுலக வாழ்வில் பங்குவைத்தோம். அவர்களில் சிலரை சிலருக்கு மேலாக (செல்வத்திலும் பதவியிலும்) தகுதிகளால் உயர்வாக்கினோம், அவர்களில் சிலர் சிலரை (அவர்கள் தங்களுக்கு) பணியாளராக எடுத்துக் கொள்வதற்காக. (-ஒருவர் மூலமாக ஒருவர் பயன் பெறுவதற்காக.) உமது இறைவனின் அருள்தான் (-சொர்க்கம்தான் இவ்வுலக செல்வங்களில்) அவர்கள் சேகரிப்பதைவிட மிகச் சிறந்ததாகும்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் உமது இறைவனின் அருளை (தமது விருப்பப்படி) பங்கு வைக்கின்றனரா? நாம்தான் அவர்களுக்கு மத்தியில் அவர்களது வாழ்வாதாரத்தை இவ்வுலக வாழ்க்கையில் பங்குவைத்தோம். அவர்களில் சிலரை சிலருக்கு மேலாக (செல்வத்திலும் பதவியிலும்) தகுதிகளால் உயர்த்தினோம். காரணம், அவர்களில் சிலர் சிலரை (தங்களுக்கு) பணியாளராக எடுத்துக் கொள்வதற்காக. (இப்படி நாம் ஆக்கியதால் ஒருவர் மூலமாக ஒருவர் பயன் பெறுகிறார்.) உமது இறைவனின் (சொர்க்கம் என்ற மறுமை) அருள்தான் (இவ்வுலக செல்வங்களில்) அவர்கள் எதை சேகரிக்கிறார்களோ அதைவிட மிகச் சிறந்ததாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. (நபியே!) உமது இறைவனின் அருளைப் பங்கிடுபவர்கள் இவர்கள்தானா? இவ்வுலகத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தை அவர்களுக்கிடையில் நாமே பங்கிட்டு, அவர்களில் சிலருடைய பதவியை சிலரை விட நாம்தான் உயர்த்தினோம். அவர்களில் சிலர், சிலரை (வேலைக்காரர்களாக) ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர். (நபித்துவம் என்னும்) உமது இறைவனின் அருளோ, அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் பொருளைவிட மிக மேலானதாகும். (அதை அவன் விரும்பியவருக்குத்தான் கொடுப்பான்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70