وَجَعَلُوا۟ ٱلْمَلَٰٓئِكَةَ ٱلَّذِينَ هُمْ عِبَٰدُ ٱلرَّحْمَٰنِ إِنَٰثًا أَشَهِدُوا۟ خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَٰدَتُهُمْ وَيُسْـَٔلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களை பெண்களாக இவர்கள் ஆக்கிவிட்டனர். அ(ந்த வான)வர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் (அங்கு பிரசன்னமாகி சாட்சியாக இருந்து) பார்த்தார்களா? இவர்களின் (இந்த) சாட்சி பதியப்படும். (அது பற்றி) இவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களை (அல்லாஹ்வின்) பெண்(பிள்ளை)களாக இவர்கள் ஆக்கிவிட்டனர். அ(ந்த வான)வர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் (அங்கு பிரசன்னமாகி இருந்து) பார்த்தார்களா? (வானவர்களை பெண்கள் என்று கூறிய) இவர்களின் (இந்த) சாட்சி பதியப்படும். இன்னும், (அது பற்றி மறுமையில்) இவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. தவிர, ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களைப் பெண்கள் என்று கூறுகின்றனரே! (நாம்) அவர்களைப் படைக்கும் போது இவர்கள் (நம்முடன் இருந்து) பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்கள் (பொய்யாகக் கற்பனை செய்து) கூறுகின்ற இவையெல்லாம் (நம் பதிவுப் புத்தகத்தில்) எழுதப்பட்டு (அதைப் பற்றிக்) கேள்வி கேட்கப்படுவார்கள்.