لِتَسْتَوُۥا۟ عَلَىٰ ظُهُورِهِۦ ثُمَّ تَذْكُرُوا۟ نِعْمَةَ رَبِّكُمْ إِذَا ٱسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا۟ سُبْحَٰنَ ٱلَّذِى سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقْرِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவற்றின் முதுகுகளில் நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும்; பிறகு அவற்றின் மீது நீங்கள் ஸ்திரமாக அமரும்போது உங்கள் இறைவனின் அருட்கொடையை நீங்கள் நினைவு கூர்வதற்காகவும்; “இதை எங்களுக்கு வசப்படுத்தி தந்தவன் மகா தூயவன். நாங்கள் இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவில்லை.”
Tamil Translation - Omar Sharifஅவற்றின் முதுகுகளில் நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும்; பிறகு அவற்றின் மீது நீங்கள் ஸ்திரமாக அமரும்போது உங்கள் இறைவனின் அருட்கொடையை நீங்கள் நினைவு கூர்வதற்காகவும்; “இதை எங்களுக்கு வசப்படுத்தி தந்தவன் மகா தூயவன். நாங்கள் இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவில்லை.”
Tamil Translation - Abdulhamid Baqawi13. ஆகவே, அவற்றின் முதுகுகள் மீது நீங்கள் (ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.) திருப்தியாக அதன் மீது நீங்கள் அமர்ந்து கொண்டால், உங்கள் இறைவன் புரிந்த இவ்வருளை நினைத்து, (இதற்காக நீங்கள் அவனை நினைவு கூர்ந்து) ‘‘இதன் மீது (ஏற) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதை வசப்படுத்தித்தந்தவன் மிக்க பரிசுத்தவான்'' என்றும்,