وَٱلَّذِى خَلَقَ ٱلْأَزْوَٰجَ كُلَّهَا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلْفُلْكِ وَٱلْأَنْعَٰمِ مَا تَرْكَبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் ஜோடிகள் எல்லாவற்றையும் படைத்தான் (-படைப்புகள் எல்லாவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தான்). இன்னும், உங்களுக்கு கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் பயணம் செய்கின்றவற்றை ஏற்படுத்தினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன் (படைப்புகளில் உள்ள) ஜோடிகள் எல்லாவற்றையும் படைத்தான் (-படைப்புகள் எல்லாவற்றையும் ஆண், பெண் என்று ஜோடி ஜோடியாகப் படைத்தான்). இன்னும், கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் எதில் பயணம் செய்வீர்களோ அதை உங்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. அவன்தான் சகலவற்றையும் (ஆணும் பெண்ணும் கலந்த) ஜோடி ஜோடியாக படைத்து, நீங்கள் வாகனித்து செல்லக்கூடிய கால் நடைகளையும் கப்பல்களையும் அமைத்தான்.