وَٱلَّذِى نَزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَأَنشَرْنَا بِهِۦ بَلْدَةً مَّيْتًا كَذَٰلِكَ تُخْرَجُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் வானத்தில் இருந்து மழையை ஓர் அளவோடு இறக்கினான். ஆக, இறந்து (-காய்ந்து) போன பூமியை நாம் அதன் மூலம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறுதான் நீங்கள் (இறந்த பின்னர் பூமியில் இருந்து மீண்டும் உயிர் கொடுத்து) வெளியாக்கப்படுவீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன் வானத்தில் இருந்து மழையை ஓர் அளவோடு இறக்கினான். ஆக, இறந்து (-காய்ந்து) போன பூமியை நாம் அதன் மூலம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறுதான் நீங்கள் (இறந்த பின்னர் பூமியில் இருந்து மீண்டும் நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு) வெளியாக்கப்படுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. அவன்தான் மேகத்திலிருந்து மழையைத் தனது திட்டப்படி இறக்கி வைக்கிறான். (இவ்வாறு செய்கின்ற அல்லாஹ்வாகிய) நாம்தான், பின்னர் (மழையை பொழியச் செய்து) அதைக்கொண்டு வறண்டுபோன பூமியை உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் சமாதிகளிலிருந்து உயிர் கொடுத்து) வெளியேற்றப்படுவீர்கள்.