أَمِ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ فَٱللَّهُ هُوَ ٱلْوَلِىُّ وَهُوَ يُحْىِ ٱلْمَوْتَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனை அன்றி அவர்கள் பாதுகாவலர்களை எடுத்துக்கொண்டார்களா? அல்லாஹ்தான் (உண்மையான) பாதுகாவலன். அவன்தான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஅவனை அன்றி அவர்கள் பாதுகாவலர்களை எடுத்துக்கொண்டார்களா? ஆக, அல்லாஹ்தான் (உண்மையான) பாதுகாவலன். அவன்தான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். இன்னும், அவன் எல்லா பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. (நபியே!) அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைத் தங்கள்) பாதுகாவலர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டனரா? (அவ்வாறாயின் அது முற்றிலும் தவறாகும்.) அல்லாஹ் (ஒருவன்)தான் உண்மையான பாதுகாவலன். அவனே மரணித்தவர்களை உயிர்ப்பிப்பான். அவன்தான் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.