وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَعَلَهُمْ أُمَّةً وَٰحِدَةً وَلَٰكِن يُدْخِلُ مَن يَشَآءُ فِى رَحْمَتِهِۦ وَٱلظَّٰلِمُونَ مَا لَهُم مِّن وَلِىٍّ وَلَا نَصِيرٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை (அவர்கள் அனைவரையும்) ஒரே ஒரு மார்க்கமுடையவர்களாக ஆக்கியிருப்பான். என்றாலும் அவன் தான் நாடியவர்களை தனது அருளில் நுழைக்கின்றான். அநியாயக்காரர்கள் - அவர்களுக்கு எந்த பாதுகாவலரும் இல்லை, எந்த உதவியாளரும் இல்லை.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை (அவர்கள் அனைவரையும்) ஒரே ஒரு மார்க்கமுடையவர்களாக ஆக்கியிருப்பான். என்றாலும் அவன், தான் நாடியவர்களை தனது அருளில் நுழைக்கிறான். அநியாயக்காரர்களோ - அவர்களுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை; இன்னும், உதவியாளர் எவரும் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi8. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் அனைவருடைய நடத்தையும் ஒரேவிதமாக இருக்கவில்லை.) ஆகவே, தான் விரும்பியவர்களையே தன் அருளில் புகுத்துகிறான். அநியாயக்காரர்(களைத் தப்பான வழியில் விட்டுவிட்டான். அவர்)களை (அந்நாளில்) பாதுகாப்பவர்களும் இல்லை; (அவர்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை.