caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 7

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:7

وَكَذَٰلِكَ أَوْحَيْنَآ إِلَيْكَ قُرْءَانًا عَرَبِيًّا لِّتُنذِرَ أُمَّ ٱلْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ يَوْمَ ٱلْجَمْعِ لَا رَيْبَ فِيهِ فَرِيقٌ فِى ٱلْجَنَّةِ وَفَرِيقٌ فِى ٱلسَّعِيرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறுதான் உமக்கு அரபி மொழியில் உள்ள குர்ஆனை நாம் வஹ்யி அறிவித்தோம், நீர் மக்காவாசிகளையும் அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காகவும் (மனிதர்கள் எல்லோரும் ஒன்று சேர்க்கப்படும்) மறுமை நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும். அதில் அறவே சந்தேகம் இல்லை. ஓர் அணி சொர்க்கத்தில் இருப்பார்கள். (வேறு) ஓர் அணி நரகத்தில் இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifஇவ்வாறுதான் உமக்கு அரபி மொழியில் உள்ள குர்ஆனை நாம் வஹ்யி அறிவித்தோம், நீர் மக்காவாசிகளையும் அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காகவும் (மனிதர்கள் எல்லோரும் ஒன்று சேர்க்கப்படும்) மறுமை நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும். அ(ந்த மறுமை நாள் நிகழப்போவ)தில் அறவே சந்தேகம் இல்லை. ஒரு பிரிவு சொர்க்கத்தில் இருப்பார்கள். ஒரு பிரிவு நரகத்தில் இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. (நபியே!) இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்தோம். (இதைக் கொண்டு, அரபி மொழி பேசும் மக்காவாசிகளாகிய) தாய்நாட்டாரையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களையும், நீர் எச்சரித்து, அனைவரையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கக்கூடிய நாளைப் பற்றி அச்சமூட்டுவீராக! அந்நாள் வருவதில் சந்தேகமே இல்லை. (அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சொர்க்கத்திற்கும், ஒரு கூட்டத்தார் நரகத்திற்கும் செல்வார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70