caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 40

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:40

وَجَزَٰٓؤُا۟ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُۥ عَلَى ٱللَّهِ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதீமையின் தண்டனை அது போன்ற தீமைதான். யார் மன்னிப்பாரோ, சமாதானம் செய்வாரோ அவரது கூலி அல்லாஹ்வின் மீது கட்டாயமாக இருக்கிறது. நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களை நேசிக்கமாட்டான்.
Tamil Translation - Omar Sharifதீமையின் தண்டனை அது போன்ற தீமைதான். ஆக, யார் மன்னிப்பாரோ, சமாதானம் செய்வாரோ அவரது கூலி அல்லாஹ்வின் மீது கட்டாயமாக இருக்கிறது. நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களை நேசிக்கமாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi40. தீமைக்குக் கூலியாக அதைப்போன்ற தீமையையே செய்வார்கள். (அதற்கு அதிகமாக அல்ல.) எவரேனும் (பிறரின் அநியாயத்தை) மன்னித்து, அவருடன் சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் (இதற்கு மாறாக) அநியாயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70