وَٱلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِرَبِّهِمْ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்கள் இறைவனுக்கு பதில் அளித்து (அவனை மட்டுமே வணங்கி, இணைவைத்தலை விட்டு விலகி) தொழுகையை நிலை நிறுத்துவார்கள். அவர்களது காரியம் அவர்களுக்கு மத்தியில் ஆலோசிக்கப்படும். இன்னும் அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் இருந்து அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் தங்கள் இறைவனுக்கு பதில் அளிப்பார்கள். (அவனது அழைப்பை, கட்டளைகளை ஏற்று நடப்பார்கள்.) இன்னும், தொழுகையை நிலை நிறுத்துவார்கள். இன்னும், அவர்களது காரியம் அவர்களுக்கு மத்தியில் ஆலோசிக்கப்படும். இன்னும், அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் இருந்து அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. மேலும், அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை அங்கீகரித்துத் தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் ஆலோசனைக்குக் கொண்டு வருவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்.