وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَا تَسْمَعُوا۟ لِهَٰذَا ٱلْقُرْءَانِ وَٱلْغَوْا۟ فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: இந்த குர்ஆனை நீங்கள் செவியுறாதீர்கள் (அதை ஏற்காதீர்கள்), அதில் (அது ஓதப்படும் போது பிறர் கேட்கமுடியாதவாறு) கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துங்கள்! அதனால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
Tamil Translation - Omar Sharifநிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “இந்த குர்ஆனை நீங்கள் செவியுறாதீர்கள் (அதை ஏற்காதீர்கள்), இன்னும், அதில் (-அது ஓதப்படும்போது பிறர் கேட்க முடியாதவாறு) கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துங்கள்! (அவரை ஓதவிடாமல் செய்ய வேண்டும், பிறரை கேட்கவிடாமல் செய்ய வேண்டும் என்ற உங்கள் நோக்கத்தில்) நீங்கள் வெற்றி பெறுவதற்காக.”
Tamil Translation - Abdulhamid Baqawi26. நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் ‘‘இந்த குர்ஆனை செவிமடுக்காதீர்கள். (எவர் அதை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டு பண்ணுங்கள். அதனால், நீங்கள் (அவர்களை) வென்று விடுவீர்கள்'' என்றும் கூறினார்கள்.