وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَآءَ فَزَيَّنُوا۟ لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ ٱلْقَوْلُ فِىٓ أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنَّهُمْ كَانُوا۟ خَٰسِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு சில நண்பர்களை நாம் இலகுவாக்கி அமைத்து கொடுத்தோம். அவர்கள் (-அந்த நண்பர்கள்) அவர்களுக்கு (அந்த பாவிகளான நிராகரிப்பாளர்களுக்கு) முன்னுள்ளதையும் அவர்களுக்கு பின்னுள்ளதையும் அலங்கரித்துக் காட்டினார்கள். இவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின்களில் மற்றும் மனிதர்களில் உள்ள (பாவிகளான) சமுதாயங்களுக்கு விதிக்கப்பட்ட அதே விதி (-அதே தண்டனை) இவர்கள் மீதும் உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாக இருக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்கு சில நண்பர்களை நாம் இலகுவாக அமைத்துக் கொடுத்தோம். ஆக, அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்கு பின்னுள்ளதையும் அந்த நண்பர்கள் அலங்கரித்துக் காட்டினார்கள். இவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களில் உள்ள (பாவிகளான) சமுதாயங்களுக்கு விதிக்கப்பட்ட அதே விதி (-அதே தண்டனை) இவர்கள் மீதும் உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாக இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. நாம் அவர்களுக்கு, இணைபிரியாத (சில கெட்ட) தோழர்களை இணைத்து விட்டோம். அவர்கள், அவர்களுக்கு முன்னும் பின்னுமுள்ள (தீய காரியங்கள்) அனைத்தையும் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டார்கள். ஆகவே, இவர்கள் மீதும், இவர்களுக்கு முன்சென்ற (இவர்களைப் போன்ற பல) மனித, ஜின் கூட்டத்தினர் மீதும் (அவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்ற) நம் வாக்கு உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) நஷ்டமடைந்து விட்டனர்.