إِذْ جَآءَتْهُمُ ٱلرُّسُلُ مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّا ٱللَّهَ قَالُوا۟ لَوْ شَآءَ رَبُّنَا لَأَنزَلَ مَلَٰٓئِكَةً فَإِنَّا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ كَٰفِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களிடம் தூதர்கள் அவர்களுக்கு முன்னிருந்தும் அவர்களுக்கு பின்னிருந்தும், “அல்லாஹ்வைத் தவிர யாரையும் எதையும் வணங்காதீர்கள் என்று (கூறியவர்களாக) வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் (எங்களை நேர்வழிபடுத்த) வானவர்களை இறக்கி இருப்பான். ஆகவே, நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள்தான்.”
Tamil Translation - Omar Sharifஅவர்களிடம் தூதர்கள் அவர்களுக்கு முன்னிருந்தும் அவர்களுக்கு பின்னிருந்தும் (ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து) வந்தார்கள். (இன்னும் அவர்கள் கூறினார்கள்:) “அல்லாஹ்வைத் தவிர (யாரையும் எதையும்) வணங்காதீர்கள்!” (இணைவைப்பாளர்கள்) கூறினார்கள்: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் (எங்களை நேர்வழிபடுத்த) வானவர்களை இறக்கி இருப்பான். ஆகவே, நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள் ஆவோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi14. அவர்களிடத்தில் (நமது பல) தூதர்கள் அவர்களுக்கு முன்னும் பின்னுமாக வந்து, (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வைத் தவிர மற்ற எதையும் வணங்காதீர்கள்'' என்று கூறினர். அதற்கு அவர்கள், ‘‘எங்கள் இறைவன் (மெய்யாகவே எங்களுக்கு ஒரு தூதரை அனுப்ப) விரும்பியிருந்தால், வானவர்களையே (தூதர்களாக) இறக்கி வைத்திருப்பான். ஆகவே, நிச்சயமாக நாங்கள், நீங்கள் கொண்டு வந்த (இத்தூ)தை நிராகரிக்கிறோம்'' என்று கூறினார்கள்.