caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 83

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:83

فَلَمَّا جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَرِحُوا۟ بِمَا عِندَهُم مِّنَ ٱلْعِلْمِ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக்கொண்டு வந்தபோது அவர்கள் தங்களிடம் இருந்த திறமைகளைக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் எதை பரிகாசம் செய்பவர்களாக இருந்தார்களோ அது (-அல்லாஹ்வின் தண்டனை) அவர்களை சூழ்ந்து கொண்டது.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்கள் தங்களிடம் இருந்த கல்வித் திறமைகளைக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் எதை கேலி செய்பவர்களாக இருந்தார்களோ அ(ல்லாஹ்வின் தண்டனையான)து அவர்களை சூழ்ந்துவிட்டது.
Tamil Translation - Abdulhamid Baqawi83. அவர்களு(க்காக அனுப்பப்பட்ட நம்மு)டைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுவந்த சமயத்தில் (அதை அவர்கள் பரிகாசம் செய்து நிராகரித்துவிட்டு, இவ்வுலக வாழ்க்கைச் சம்பந்தமாகத்) தங்களிடமுள்ள கல்வி (திறமைகளைப்) பற்றிப் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். எனினும், (இறுதியில்) அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தது அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70