caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 77

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:77

فَٱصْبِرْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ فَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا يُرْجَعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, (நபியே!) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஒன்று அவர்களை நாம் எச்சரித்தவற்றில் (தண்டனைகளில்) சிலதை உங்களுக்கு காண்பிப்போம். அல்லது (அதற்கு முன்னர்) உம்மை உயிர் கைப்பற்றிக்கொள்வோம். (பின்னர்) நம் பக்கம்தான் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். (அப்போது அவர்களுக்கு நமது தண்டனையைக் காண்பிப்போம்.)
Tamil Translation - Omar Sharifஆகவே, (நபியே! சகிப்புடன் மன உறுதியுடன்) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஆக, ஒன்று, அவர்களை நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு காண்பிப்போம். அல்லது, (அதற்கு முன்னர்) உம்மை உயிர் கைப்பற்றுவோம். ஆக, (பின்னர்) நம் பக்கம்தான் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். (அப்போது அவர்களை தண்டிப்போம்.)
Tamil Translation - Abdulhamid Baqawi77. (நபியே!) பொறுமையுடன் (உறுதியாக) இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. அவர்களை நாம் பயமுறுத்துகின்ற வேதனைகளில் சிலவற்றை (உமது வாழ்நாளில்) நாம் உமக்குக் காண்பித்தாலும் சரி, அல்லது, (அவை வருவதற்கு முன்னதாகவே) நாம் உம்மைக் கைப்பற்றி (நீர் இறந்து) விட்டாலும் சரி, நிச்சயமாக அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70