يَوْمَ لَا يَنفَعُ ٱلظَّٰلِمِينَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ ٱللَّعْنَةُ وَلَهُمْ سُوٓءُ ٱلدَّارِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்களின் சாக்குபோக்குகள் பலனளிக்காது. அவர்களுக்கு சாபம்தான் மிஞ்சும். இன்னும் அவர்களுக்கு கெட்ட வீடும் (கடுமையான தண்டனை உள்ள நரகமும்தான்) உண்டு.
Tamil Translation - Omar Sharifஅந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் வருத்தங்கள் தெரிவிப்பது பலனளிக்காது. அவர்களுக்கு சாபம்தான் உண்டாகும். இன்னும், அவர்களுக்கு (தங்குமிடம் தண்டனைகள் நிறைந்த நரகமாகிய) கெட்ட இல்லமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi52. அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் கூறும் புகல்கள் ஒன்றுமே பயனளிக்காது. அவர்களுக்கு (இறைவனின்) சாபமும் உண்டு; அவர்களுக்குத் தீய இருப்பிடமும் உண்டு.