تَدْعُونَنِى لِأَكْفُرَ بِٱللَّهِ وَأُشْرِكَ بِهِۦ مَا لَيْسَ لِى بِهِۦ عِلْمٌ وَأَنَا۠ أَدْعُوكُمْ إِلَى ٱلْعَزِيزِ ٱلْغَفَّٰرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநான் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் எனக்கு அறிவில்லாத ஒன்றை அவனுக்கு நான் இணைவைப்பதற்கும் நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள். நான் உங்களை மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் பக்கம் அழைக்கின்றேன்.
Tamil Translation - Omar Sharif“நான் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் எனக்கு அறிவில்லாத ஒன்றை அவனுக்கு நான் இணைவைப்பதற்கும் நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். நானோ உங்களை மிகைத்தவனின் பக்கம், மகா மன்னிப்பாளனின் பக்கம் அழைக்கிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi42. தவிர, நான் அல்லாஹ்வை நிராகரித்துவிட்டு (இறைவனென) நான் நம்பாததை அவனுக்கு இணைவைக்கும்படி என்னை நீங்கள் அழைக்கிறீர்கள். நானோ, உங்களை (அனைவரையும்) மிகைத்தவன், மிக மன்னிப்புடையவனின் பக்கம் அழைக்கிறேன்.