لَا جَرَمَ أَنَّمَا تَدْعُونَنِىٓ إِلَيْهِ لَيْسَ لَهُۥ دَعْوَةٌ فِى ٱلدُّنْيَا وَلَا فِى ٱلْـَٔاخِرَةِ وَأَنَّ مَرَدَّنَآ إِلَى ٱللَّهِ وَأَنَّ ٱلْمُسْرِفِينَ هُمْ أَصْحَٰبُ ٱلنَّارِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகண்டிப்பாக நீங்கள் என்னை எவற்றின் பக்கம் அழைக்கின்றீர்களோ அவற்றுக்கு இவ்வுலகத்திலும் மறுமையிலும் எவ்வித பிரார்த்தனையும் இல்லை. (-நீங்கள் கேட்கின்ற எந்த பிரார்த்தனையும் அவை செவியுறாது, செவியுறவும் முடியாது.) நிச்சயமாக நாம் திரும்புவது அல்லாஹ்வின் பக்கம்தான், நிச்சயமாக வரம்புமீறிகள், அவர்கள்தான் நரகவாசிகள்.
Tamil Translation - Omar Sharif“கண்டிப்பாக, நீங்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகத்திலும் மறுமையிலும் (அங்கீகரிக்கப்பட்ட) பிரார்த்தனை ஏதும் இல்லை. (-நீங்கள் கேட்கிற எந்த பிரார்த்தனையும் அது செவியுறாது, செவியுறவும் முடியாது.) நிச்சயமாக நாம் திருப்பப்படுவது அல்லாஹ்வின் பக்கம்தான், நிச்சயமாக எல்லை மீறி பாவம் செய்பவர்கள்தான் நரகவாசிகள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi43. என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ, அது இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி (இறைவனென்று) அழைக்கப்படுவதற்கு ஒரு சிறிதும் நிச்சயமாக அதற்குத் தகுதி இல்லை என்பதில் சந்தேகமில்லை. அல்லாஹ்விடமே நாம் அனைவரும் திரும்பச் செல்வோம் (என்பதிலும் அறவே சந்தேகமில்லை). வரம்பு மீறுபவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் (என்பதிலும் அறவே சந்தேகமில்லை).