caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:3

غَافِرِ ٱلذَّنۢبِ وَقَابِلِ ٱلتَّوْبِ شَدِيدِ ٱلْعِقَابِ ذِى ٱلطَّوْلِ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ إِلَيْهِ ٱلْمَصِيرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவன்) பாவங்களை மன்னிப்பவன், (அடியார்கள் பாவங்களைவிட்டு விலகி) திருந்தி மன்னிப்புக் கோருவதை அங்கீகரிப்பவன், தண்டிப்பதில் கடுமையானவன், அருள் உடையவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் அறவே (யாரும்) இல்லை. அவன் பக்கமே மீளுமிடம் இருக்கிறது.
Tamil Translation - Omar Sharif(அவன்) பாவங்களை மன்னிப்பவன், (அடியார்கள் பாவங்களைவிட்டு விலகி) திருந்தி மன்னிப்புக் கோருதலை அங்கீகரிப்பவன், (திருந்தாத பாவிகளை) தண்டிப்பதில் கடுமையானவன், (நல்லவர்கள் மீது) அருளுடையவன். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் பக்கமே மீளுதல் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi3. அவன் (குற்றவாளிகளுடைய) மன்னிப்புக் கோரலை அங்கீகரித்து பாவங்களை மன்னிப்பவன். (மனமுரண்டாக குற்றம் புரியும் பாவிகளை) வேதனை செய்வதிலும் கடினமானவன். (நல்லவர்கள் மீது) அருள் புரிபவன். அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனிடமே (அனைவரும் விசாரணைக்காகச்) செல்ல வேண்டியதிருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70