فَلَمَّا جَآءَهُم بِٱلْحَقِّ مِنْ عِندِنَا قَالُوا۟ ٱقْتُلُوٓا۟ أَبْنَآءَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ وَٱسْتَحْيُوا۟ نِسَآءَهُمْ وَمَا كَيْدُ ٱلْكَٰفِرِينَ إِلَّا فِى ضَلَٰلٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது அவர்கள் கூறினார்கள்: “இவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்று விடுங்கள்! அவர்களின் பெண்(பிள்ளை)களை வாழவிடுங்கள்!” நிராகரிப்பவர்களின் சூழ்ச்சி வழிகேட்டில் தவிர இல்லை.
Tamil Translation - Omar Sharifஆக, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டுவந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்று விடுங்கள்! அவர்களின் பெண்(பிள்ளை)களை வாழவிடுங்கள்!” (இத்தகைய அநியாயம் செய்கிற) நிராகரிப்பவர்களின் சூழ்ச்சிகள் (எல்லாம்) வழிகேட்டில் தவிர இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi25. அவர், உண்மையான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுசென்ற போதெல்லாம் அதற்கவர்கள், ‘‘(மூஸாவை) நம்பிக்கை கொண்டிருப்பவர்களுடைய ஆண் மக்களை கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ விடுங்கள்'' என்று (தன் மக்களுக்குக்) கூறினார்கள். ஆகவே, இந்நிராகரிப்பவர்களின் சூழ்ச்சி வழிகேட்டிலேயே தவிர (வேறு எதிலும்) செல்லவில்லை.