ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ لَا رَيْبَ فِيهِ وَمَنْ أَصْدَقُ مِنَ ٱللَّهِ حَدِيثًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. (அவன்) நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் அறவே சந்தேகம் இல்லை. பேச்சால் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் அறவே சந்தேகம் இல்லை. பேச்சால் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?
Tamil Translation - Abdulhamid Baqawi87. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவன் நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்று சேர்ப்பான். இதில் சந்தேகமேயில்லை. அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்?